Header Ads Widget

<

தமிழகத்தில் மின் கட்டணம் புதிய மாற்றம் மக்கள் மகிழ்ச்சி - TAMILNADU ELECTRICITY BOARD BILL NEWS 2022


தமிழகத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மின் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின் ஊழியர்கள் மின் கணக்கீடு எடுக்கும் பணியை செய்து வந்தனர். ஆனால் தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே செல்போன் செயலி மூலமாக மின் கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் செயலி மூலம் கட்டணம் கணக்கீடு செய்ய கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். செல்போன் செயலியில் மின் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது மற்றும் SMS நுகர்வோருக்கு அனுப்பப்படும். இவ்வாறு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு செல்போன் செயலிகள் வழங்கப்பட்டு, பிப்ரவரி மாதம் முதல் பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பலன் அளித்தால் தமிழகம் முழுவதும் இனி செல்போன் செயலி மூலமே மின்கட்டணம் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு 2 மகிழ்ச்சி அறிவிப்பு 


மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை 

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து கூறுகையில்; மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்படும். தற்போது மின் கணக்கீட்டாளர்கள் 50% பற்றாக்குறை உள்ளது. இதனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதம் தோறும் மின் கட்டண கணக்கீடு திட்டத்தில் டிஜிட்டல் மீட்டர்களை கொண்டு நடைமுறைப்படுத்தினால், மின் கட்டண கணக்கீட்டு பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிவையும் போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியான மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் ஒத்திவைப்பு முக்கிய அறிவிப்பு