Header Ads Widget

<

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.3000 வெளியான முக்கிய அறிவிப்பு - TAMILNADU RATION CARD PONGAL FESTIVAL GIFT NEWS 2022



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் பொது மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது பொங்கல் தொகுப்புடன் கூடிய ரொக்கப்பணம் வழங்குவது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் ஜனவரி 3ம் தேதி தொடங்கி வைக்கும் நிலையில் அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த பொங்கல் தொகுப்பு ஒன்றுக்கு ரூ.505 செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியள்ளது. அதன்படி தினமும் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் வழங்கப்பட வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள உள்ள தேதி, நேரதிற்கு வந்து ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய  ரொக்கப்பணம் ரூ.2500 வழங்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் ரொக்கப்பணம் வழங்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையிலும் தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் கூடிய வழங்கும் என்றும் பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் எந்த நேரத்திதில் வேண்டுமானாலும் அறிவிப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பொங்கலுக்குப்  பிறகு முழு ஊரடங்கு அறிவிப்பு