Header Ads Widget

<

நாளை முதல் ஆதார் அட்டைக்கு 2 அதிரடி உத்தரவு மக்களே உஷார் - TAMILNADU AADHAR CARD LOCKDOWN NEWS 2022


நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கு தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்களின்  சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம். அரசியலமைப்பு சட்டத்தின் படி வாழ்வாதாரத்திற்கு ஆதார் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பள்ளிகள், வங்கிகள், செல்போன் சிம் கார்டு, நீட் தேர்வு, பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வருமானவரி, சிபிஸ்சி ஆகிய அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் வெளிச்சந்தைகளில் விற்கப்படும் AADHAR PVC CARD செல்லாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காணரங்களுக்காக வெளி சந்தைகளில் விற்பனையாகும்  ஆதார் பிவிசி கார்டுகளை வாங்க வேண்டாம் எனவும் அது செல்லாது எனவும் பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர் நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து ஆதார் ஆணையம் (UIDAI) கூறுகையில், வெளிச்சந்தைகளில் விற்பனையாகும் PVC பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது என்றும் அதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டை ஆதார் ஆணையத்தின் ஆதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று அதில் உள்ள (ORDER AADHAR PVC CARD) என்ற பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் ரூ. 50 கட்டணம் செலுத்தினால் ஸ்பீட் போஸ்ட் மூலமாக வீட்டிற்கே நேரடியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு