Header Ads Widget

<

தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் மீண்டும் முழு ஊரடங்கு - OMICRON VIRUS TAMILNADU LOCKDOWN NEWS TODAY 2021

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களின் கல்வி திறன் மிகவும் பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருள்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனவை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற தீவிர நடவடிக்கைளில் தமிழக அரசு ஈடுபட்டு படிப் படியாக கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் படிப் படியாக ஊரடங்கு தளர்வுகள் அளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்த நிலையில் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவி வரும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் முதல் முறையாக ஓமிக்ரான் கொரோனா வைரஸ் நவம்பர் 24ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இந்திய உள்பட 50 மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பொறுத்தவரை கர்நாடகா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த தொற்று பரவியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்களை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தருமபுரி  ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  இதனால் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடத்தில நடமாட தடை விதிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். மேலும் சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதால் கவனமுடன் இருக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் அதிகம் தொற்று பாதிப்புகள் இருக்கும் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதிய அறிவிப்பு