தமிழகத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ.2000 வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூதுக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர், திருநெல்வேலி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மேலும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதியாக ரூ.2000 வழங்க தமிழக அரசு பரிசீலினை செய்து வந்தது. இதற்கான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதுவை அரசு வழங்கியது போல ரேஷன் அட்டைக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை வழங்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் விடுத்த கோரிக்கையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல்வேரு மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகங்கங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே நிவாரண தொகையாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கு ரூ.10000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தமிழக அரசு இந்த கோரிக்கைகளை பற்றி கலந்து ஆலோசித்தும் மறு பரிசீலினை செய்தும் இதற்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றவுடன், விரைவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கும் என்றும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அரசு அறிவிக்கும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.