தமிழகத்தில் நாளுக்கு நாள் ஓமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2746000 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 6654 பேர் கொரோனா தொற்றுக்கு கிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பும் அதிகமாகி கொண்டே வருகிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதே போல தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் படி படியாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அல்லது பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஓமிக்ரான் பாதிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.