தமிழகத்தில் தொடர்ந்து ஓமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வருகிற ஜனவரி 1 2022 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலையின் தாக்கம் மிகவும் அதிகளவில் இருந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்த நிலையில் மீண்டும் தென்னாப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் வைரஸ் கிட்டத்தட்ட 90ம் மேற்பட்ட நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலக சுகாதார மையம் கூறுகையில், ஓமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸை விட 10 மடங்கு பரவும் தன்மை கொண்டது என்றும் ஆகவே அனைத்து நாடுகளும் கவனமுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை இந்த ஓமிக்ரான் வைரஸ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் வெளியூரில் இருந்து தமிழகம் வந்த 43 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள விழிப்பாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஓமிக்ரான் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அதிக ஆபத்தை ஏற்படுத்தும், எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது , சமூக இடைவெளி பின்பற்றுவது , சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பின்பற்றும்படி அறிவுறுத்தும் படி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்தால் ஜனவரி 1 2022 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.