Header Ads Widget

<

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை பள்ளி கல்லூரி விடுமுறை - TAMILNADU RAIN SCHOOL COLLEGE LEAVE NEWS

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்க்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 



சற்றுமுன் வெளியான தகவலின் படி குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்தூக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல புதுகோட்டை, மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை 

தமிழகத்தில் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, தஞ்சாவூர், விழுப்புரம், திருவாரூர், திருநெல்வேலி, தூத்தூக்குடி, கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, கள்ளக்கிறிச்சி, விருதுநகர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளதை போல நாளையும் தமிழகத்தில் கனமழை தொடரவுள்ளதால் நாளையும் பல மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் டிசம்பர் 3 வரை கனமழை பள்ளி கல்லூரி