தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
நவம்பர் 14ம் தேதி
திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தென்காசி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 15ம் தேதி
நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 16 மற்றும் 17ம் தேதி
தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 4 நாட்களுக்கு குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் , மத்திய கிழக்கு , தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கேரளா கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல், லட்ச தீவு மற்றும் மாலைதீவு பகுதிகளில் சூறாவளி காற்று 60 கிமீ வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.