Header Ads Widget

<

தீபாவளி முன்னிட்டு ரேஷன் அட்டைக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு - RATION CARD DIWALI GIFT RS. 2000 NEWS

தீபாவளி முன்னிட்டு ரேஷன் அட்டைக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பொது மக்கள் பயன் பெரும் வகையில் சிறப்பு பேருந்து, தொடர் விடுமுறை போன்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.






தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களின் வறுமை போக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்கூட்டியே பொருள்களை வாங்காதவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு நவம்பர் 7ம் தேதி முதல் அத்தியாவசிய பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே போல இந்த தீபாவளி பண்டிகைக்கும் பரிசு தொகை வழங்கப்படும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை.

மேலும் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் நவம்பர் 4 முதல் 7ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை ஊழியர்கள் பெறுவார்கள். இதனால் வெளியூர்களுக்கு சென்று வருபவர்களுக்கு இந்த விடுமுறை பயனுள்ளதாக அமையும். மேலும் இந்த மழை காலத்தில் இந்த விடுமுறை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.