தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாகவும் உற்சாகத்துடனும் கொண்டாட பட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைதாதரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருள்களும் , மேலும் கரும்பு மற்றும் ரொக்கமாக பணமும் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 வகையான இலவச பொருள்களை அறிவித்துள்ளார். அதன்படி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், ஏலக்காய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, ஆகிய பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை, இதனால் விவசாயிகள் கடந்த ஆண்டை போல வருகிற பொங்கல் பண்டிகைக்கு கரும்பை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிகள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று மறு பரிசீலினை செய்து பொங்கல் தொகுப்புடன் கரும்பும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.