Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடி நாளை முதல் யாருக்கு செய்யப்படும் தமிழக அரசு அறிவிப்பு - NAGAI KADAN THALLUPADI NEWS 2021

5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி யார் யாருக்கு செய்யப்படும் யார் யாருக்கு செய்யப்படாது  என்று தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



வழிகாட்டு நெறிமுறைகள்  

1. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றிருந்தால் யாரேனும் ஒருவருக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.

2. ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். வசதி படைத்தவர்களுக்கு தள்ளுபடி ஆகாது.


3. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 31.03.2021ம் வரை 5 சவரன் மிகாமல் உள்ள நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்படும்.


4. தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் சரியாக உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த நகை கடன் தள்ளுபடி செய்ய்யப்படும்.


5. இலங்கை தமிழர்கள், மறுவாழ்வு முகாம்கள் மற்றும் தமிழக அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் ஆவர்.


6. ஒரு தனி நபர் ஆதார் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி ஆகாது.
7. 31.03.2021 க்கு பிறகு நகை கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி ஆகாது.


8. பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் பயன்பெற்றவர்கள் (2021ம் ஆண்டு) அவர்தம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் நகை கடன் பெற்றிருந்தால்  தள்ளுபடி ஆகாது.


9. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு துறையில் தற்காலிக அடிப்படையிலோ, காலமுறை அடிப்படையிலோ, தொகுப்பூதிய அடிப்படையிலோ பணிபுரிபவர்களுக்கு தள்ளுபடி ஆகாது. இதே போல கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தள்ளுபடி ஆகாது.


10. போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பபடாது.


11. தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாமல் பிற மாநில ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு தள்ளுபடி ஆகாது.


12. இவ்வாறு தமிழக அரசு பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வங்கிகளுக்கு நேரில் சென்று பயனாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.