தமிழகத்தில் டிசம்பர் 3 வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது. இந்தப் புயலானது ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கிடைக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் டிசம்பர் 3ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் தென் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ம் தேதி வரை வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிஷா பகுதிகளில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு சூறாவளி காற்று மணிக்கு 70 கிமீ வரை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இன்று பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிக கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.