Header Ads Widget

<

தமிழக ரேஷன் அட்டைதாதர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு - TAMILNADU RATION CARD LATEST NEWS

தமிழக ரேஷன் அட்டைதாதர்களுக்கு அனைவருக்கும் அரசு தரப்பில்  ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் எந்த வித சிக்கல் இல்லாமல் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.



தமிழகத்தில் நியாய விலை  கடைகள் மூலம் மலிவு விலையில் குடும்ப அட்டைதாதர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் கை விரல் ரேகை பதிவு செய்த பிறகே பயனாளிகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் சிலருக்கு கைரேகை வைத்தாலும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சரியாக விழுவதில்லை இதனால் காலம் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக முதியோர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது. மேலும் சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்த சிறுவர்கள் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும். அதே போல 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஆதார் மற்றும் பயோமெட்ரிக் கைரேகை வைத்து அப்டேட் செய்வது முக்கியமாகும்.

ஒரு சில பேருக்கு கை விரல் ரேகை தேய்ந்தும் வயதானவர்களுக்கு சுருக்கங்கள் இருப்பதால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது அவசியம். ஆகையால் இதனை அப்டேட் செய்பவர்கள் உங்கள் ஊரில் உள்ள தாலுகா ஆபீஸ் மாநகராட்சி ஆபீஸ் காலெக்டர் அலுவலங்களில் உள்ள ஆதார் சேவை மையத்தில் நேரில் சென்று அணுகலாம் . இதனை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்வது முடியாது.

ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருள்களை வாங்க முடியாதவர்கள் அதாவது முதியோர்கள் மாற்று திறனாளிகளுக்கு அவர்களுக்கு பதிலாக அவர்களின் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலமாக பொருள்களை  பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரேஷன் கடைகளில் தனி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் அனைத்து ரேஷன் கடைகளிலும் இருக்கிறது அல்லது குடும்ப அட்டை அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ரேஷன் கடைகளில் கொடுத்து பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.

 குடும்ப தலைவிக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்