தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் தமிழக ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோகம் செய்வதில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பண்டிகை காலங்களில் பரிசு பொருள்கள் மற்றும் உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தில் நிவாரண நிதி ரூ.2000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. மேலும் 14 வகையான மளிகை பொருள்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சில அதிரடி உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையில்லாமல் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே கிடைக்க வேண்டும் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தங்கு தடையில்லாமல் ரேஷன் கடைகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டது போல தீபாவளி பண்டிகைக்கும் பரிசு தொகை ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்குமா என்று பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.