தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் அட்டைக்கு தீபாவளி சிறப்பு சலுகைகள் பற்றி மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரேஷன் அட்டைதாரகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.2000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் 14 வகையனான மளிகை பொருளைகளும் வழங்கப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதில் முக்கியமானது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவதுதான். ரேஷன் அட்டைகளிலுள்ள அதாவது புகைப்படத்தின் கீழ் உள்ள குறியீடுகள் PHH, PHHAA, NPHH இந்த வகை குடும்ப அட்டைகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து இந்த வகை அட்டைக்குதான் வழங்கப்படும் என்று எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அதற்க்கான கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதிய ரேஷன் அட்டைக்குக்கு விண்ணப்பித்துள்ள அனைவர்க்கும் 15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை கிடைக்கும்படி வழிவகை செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைகளுக்கு தீபாவளி சலுகைகளை வழங்க உள்ளது. ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்கள், மாத ஊதியம் பெறுபவர்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் தீபாவளி போனஸ் வழங்கும். இந்த போனஸ் வைத்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தீபவளிக்கு தேவையான ஆடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் வாங்கி கொண்டு பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இதேபோல் குடும்ப அட்டைதார்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சிறப்பு போனஸ் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போனஸ் ரொக்கமாகவும் பொருள்களாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு பலகாரம் செய்வதற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வருகிற நவம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் வழங்க உள்ளதாகவும் மேலும் அந்த தேதிகளில் இந்த ஊக்கத்தொகையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு நவம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்கு தடையின்றி பொருள்களை வழங்கவும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரகளுக்கு பொருட்களை வழங்காமல் அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.