கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும் யாரெல்லாம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் சட்ட பேரவையில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டும் கூட்டுறவு நிறுவனங்கள், கடன்சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இதற்காக 51 விதமான தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். இந்த 51 விதமான தகவல்களில் பயனாளிகளின் ஆதார் எண், ரேஷன் கார்டு, எண் முகவரி, ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களின் அனைத்து நகை கடன் பற்றிய விவரங்கள், செல்போன் நம்பர் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும்.
இந்த தகவல்கள் மற்றும் விபரங்களை சேகரித்ததில் நகை கடன் செய்யப்பட்டதில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை போட்டி போட்டு தெரிவித்தனர். இதனை சிலபேர் பயன்படுத்தி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவது உறுதி என்று கருதி வீட்டில் உள்ள அனைத்து நகைகளை 5 சரவன்களாக பிரித்து பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது. இதில் சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்களில் சிலர் போலி நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் 10 பேர் மீது வழக்கு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் வங்கி ஊழியர்களும் அடங்கும். இதே போல் திருவண்ணாமலை, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களிலும் இந்த மோசடிகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் அருகே ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் பல மாவட்டங்களில் பல கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட்ட கடன்கள் மூலம் ஆயிரத்து அறநூற்றி எண்பத்தி ஐந்து எண்ணிகளியிலான நகை கடன்கள் மூலமாக 5 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு மூலமாக கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல பல மாவட்டங்களிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள், நிறுவங்கங்கள் மூலமாக 1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வுகள் குறித்த அறிக்கை நாளை சதுர துணை பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் உண்மையான பயனாளிகளின் பட்டியல் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்றும் அடுத்த மாத முதல் வாரத்தில் இருந்து தகுதியுள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.