60 வயது அதற்கு மேல் உள்ள முதியோர்கள் பயன்பெறும் வகையில் சூப்பரான 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பின் மூலமாக முதியோர்களிடையே மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு சில வீடுகளில் அவர்களை ஒரு பாரமாக கருதி வருகின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் வயது முதிர்ந்த பெரியோர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்கு விருப்பப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய சமூக நீதி அமைச்சகம் வயதானோர் பயன்பெறும் வகையில் ஒரு புதிய வெப்சைட் உருவாகியுள்ளது.
https://sacred.dosje.gov.in என்ற இணையதளத்தில் 60 வயது அதற்கும் மேற்பட்டவர்கள் பெயர், கல்வி தகுதி, முன் அனுபவம், எந்த பணியில் சேர விருப்பம் போன்ற தகவல்களை இந்த வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுக்கு தேவையான பணியாளரை நிறுவனங்கள் தேர்வு செய்து பணியில் அமர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.