தமிழகத்தில் குடும்ப அட்டைதாதார்கள் பயன்பெறும் வகையிலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
தரமான ரேஷன் அரிசி
நியவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமில்லாமல் மிகவும் மோசமாக இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை சரிசெய்யும் நோக்கில் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறுகையில், தமிழக குடும்ப அட்டைதாதர்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யும் ஆலைகளில் அரிசியை தரம்பிரிக்கும் கலர் ஷேடிங் இயந்திரம் நிறுவியுள்ளதாகவும், இதனால் விரைவில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாதர்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் தற்போது இரண்டு கோடியே பதிமூன்று லட்சத்து எண்பதாயிரம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஆனால் வசதி படைத்த சில பேருக்கு முன்னுரிமை அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது . வசதி இல்லாத ஏழை எளிய மக்கள் முன்னுரிமை இல்லாத அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது . இதனால் சரியான பயனாளிகளுக்கு சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. எனவே இதை ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை தடுக்க சிறப்பு குழு
சில ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நியாய விலை கடைகளில் பொருள்கள் இருப்பு எவ்வளவு குடும்ப அட்டைதாதர்களுக்கு வழங்கிய பொருள்களின் அளவு மற்றும் எடை அளவு கள்ள சந்தைகளில் விக்கப்படுகிறதா போன்றவற்றை கண்காணிக்கும். இதில் முறைகேடுகள் இருந்தால் சம்பத்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
ரேஷன் கடைகளுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரமுடியாத பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக அவர்களுக்கு தெரிந்த அங்கீகரிக்கப்பட்ட நபர் ரேஷன் கடைகளில் இதற்காகவே வைக்கப்பட்டிருக்கும் அத்தாட்சி கடிதத்தை பூர்த்தி செய்து கைரேகை பதிவு இல்லாமல் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமை தொகை
தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிதியுதவி இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வேஷ்டி சேலை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக்கடைகளில் இலவச வேஷ்டி சேலை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகள் வடிவமைப்பு வண்ணங்களில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.