தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குடும்ப அட்டைகள் முடக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் அடிப்படையில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும் மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால் புதிதாக திருமணமாணவர்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே குடும்ப அட்டையிலுள்ள தங்களின் பெயரை நீக்கி புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் எத்தனை ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்று கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல குடும்ப அட்டைகள் சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி வாங்காமல் இருப்பதனால் பொருள்கள் ரேஷன் கடைகளில் தேங்கி கிடந்தது வீணாகி வருகிறது. மேலும் சில ரேஷன் கடைகளில் இதையே சந்தர்ப்பமாக பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களை வெளியில் கள்ள சந்தையில் விற்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை, உரிய காரணம் இல்லாமல் ரேஷன் பொருள்கள் 3 மாதம் அதற்கு மேல் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருந்தால் சம்பத்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் ரேஷன் கடை அதிகாரிகளை அணுகுமாறு தெரிவித்துள்ளது.