தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி வரவுள்ளதால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிதியுதவி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.
தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தீபாவளிக்கு இனிப்பு பலகாரம் செய்வதற்கு அத்தியாவசிய பொருள்களை இந்த தீபாவளிக்கு முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 1 2 3 ம் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கும்படி ரேஷன் கடைகளுக்கு ஆணையிட்டுள்ளது.
அடுத்தபடியாக தமிழக ரேஷன் கடைகளில் பனைவெல்லம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இவை தீபாவளி முன்னிட்டு குடும்ப அட்டர்தாரர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ரேஷன் அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளை தயார் செய்து வருகிறது. இதில் 5 வகையான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை வாட்ஸ் ஆப் மூலமாகவும் ஆன்லைன் மூலமாவும் பதிவு செய்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவின் இனிப்பு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைதாரகளுக்கு தீபாவளி பரிசு ரூ.1000 வழங்குவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.