குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது யாருக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏன் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகின்றது என்று தமிழக அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் படி படியாக செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஐநூற்றி ஐந்து வாக்குறுதிகளில் இருநூற்றி இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. ஆனால் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதில் நீட் தேர்வு ரத்து கேஸ் சிலிண்டர் மானியம் ரேஷன் கடைகளில் 1கிலோ சீனி உளுந்தம்பருப்பு முக்கியமாக குடும்ப தலைவிக்கு மாதம் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட போது உண்மையான பயனாளிகளுக்கு சரியான முறையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் முறைகேடுகள் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குடும்ப அட்டைகளுக்கு பயனாளிகளின் விவரம் சேகரித்த பின்பு அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறுகையில் கடந்த ஆட்சியில் அரசின் கஜானா காலி செய்துவிட்டனர். இதனால் தற்போது பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதிச்சுமையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைய உள்ளது.
இந்த திட்டம் காலா காலம் மாதம் மாதம் குடும்ப இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட இருப்பதனால் இதற்கு பெரும் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால தான் தாமதம் ஏற்படுகிறது. இத்திட்டத்திற்க்காண கணக்கு எடுக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இன்னும் 3 மாதங்களில் இல்லத்தரசிகளுக்கு மாத மாதம் ரூ.1000 வழங்கப்டும் எனக் கூறினார்.