தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு தீபாவளி பரிசு ரூ.1000 வழங்கப்படும் என்றும் எப்போது வழங்கப்படும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களின் வறுமை ஓரளவிற்கு போக்கப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. மேலும் 14 வகையனாக மளிகை பொருள்களும் வழங்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருள்களின் தொகுப்பு வழங்கப்படும் மேலும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ஆம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் தீபாவளி பண்டிகை வருவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான மளிகை பொருள்கள் முன் கூட்டியே வழங்கப்படும் என்று அறிவித்தார். அதாவது அடுத்த மாதம் முழுவதும் வழங்க வேண்டிய ரேஷன் பொருள்களை நவம்பர் 1 2 3 ம் தேதிகளில் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு உத்திரவிட்டுள்ளார். மேலும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளார்.
நவம்பர் 1 2 3 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் அட்டைதார்களுக்கு பொருள்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அலைக்கழிக்க கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைக்கு ரூ. 1000 பரிசு தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் இவை தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.