நரை முடி கறுப்பாக மாற வழுக்கையில் முடிவளர சூப்பர் டிப்ஸ்
நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிட்ட வயது கடந்ததும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி மறைப்பதும் வழுக்கை விழுவதும் வழக்கம். நரைமுடி கருப்பாக பலர் கெமிக்கல் கலந்த டை அடித்து தேவையில்லாமல் பக்க விளைவை சந்திக்கின்றனர். மேலும் வழுக்கை தலையில் முடி வளர கடையில் கண்ட எண்ணெய்களையும் லோஷன்களையும் தலையில் தேய்த்து இருக்கிற முடியை இழக்கின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான முறையில் நரை முடி கருப்பாகவும், முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யவும் முடியும்.
கருஞ்சீரகம், அவுரி பொடி, ஹென்னா பவுடர் இதனை கொண்டு நாம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால். முதலில் கருஞ்சீரகத்தை தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து பேஸ்ட் போல் வரும் வரை அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அவுரி பொடி 3 ஸ்பூன் மற்றும் ஹென்னா பவுடர் 3 ஸ்பூன் அளவு எடுத்து நீர்விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் கருஞ்சீரக கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு குளிப்பதற்கு முன்பு இந்த கலவையை தலையில் தேய்த்து ஒரு 10 முதல் 15 நிமிடம் காயவிட்டு பிறகு ஷாம்பூ போட்டு குளிக்கவும். இப்படி வாரத்தில் 3 நாட்கள் செய்தால் நரை முடி கறுப்பாகும், முடியும் கொட்டாது, வழுக்கையிலும் முடி வளரும்.