Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நவம்பரில் கிடையாதா.? வெளியான தகவல் - TAMILNADU SCHOOL TO REOPEN NOVEMBER 1 FOR CLASSES 1 TO 8 STUDENTS

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பரில் பள்ளிகள்  திறக்க வேண்டாம் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.




கொரோனா பெருந்தொற்றால் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும்  பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்  கல்வி தொலைக்காட்சி மூலமாகவும்  வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிரமங்கள் மேற்கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த நிலையில் தமிழக அரசின் துரித நடவடிக்கைகளால் கொரோனவை கட்டுப்படுத்தி தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வரை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களும் தினந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயின்று வருகின்றனர். அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க  வேண்டும் என்றும் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தது.



இவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் அனுமதித்துள்ளார். இதனால் இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருந்த மாணவர்களுக்கு புதிய உற்சாகம் கிடைத்தது. இதற்கிடையில் சமூகநல ஆய்வாளர்கள் மற்றும்  தனியார் பள்ளி அமைப்புகள் அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில் கொரோனா 3ம் அலைஅடுத்த மாதம் வர வாய்ப்பு உள்ளதால் முதலில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பிறகு சூழ்நிலைக்கேற்றவாறு 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே தமிழக அரசு இந்த கோரிக்கைகளை வைத்து மீண்டும் சில ஆலோசனைகளுக்கு பிறகு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.