Header Ads Widget

<

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு - TAMILNADU MONTHLY ELECTRICITY BILL NEWS

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



தமிழகம் முழுவதும் தற்போதைய சூழலில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த முறையால் கட்டண தொகை அதிகம் வருகிறது.  இதன் காரணமாக பொதுமக்கள் மின்கட்டணம் செல்லுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு திமுக அரசு தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. 

அதே போல தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை படி படியாக செயல்படுத்தி வருகிறது. தற்போது மாதம் ஒரு முறை மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதன் மூலம் வீட்டு மின் கட்டணம் கணிசமாக குறையும். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்றால் கட்டணம் அதிகம் வரும் தமிழகதில் நூறு யூனிட் வரை மின்சாரம் இலவசமாக தரப்படுகிறது. உதாரணமாக ஒரு வீட்டில் 200 யூனிட் அளவு மின்சாரம் பயன்படுத்தினால் முதல் நூறு யூனிட்கள் இலவசமாகவும் அதற்குமேல் உள்ள ஒரு யூனிட்க்கு ரூ.1.50 கட்டணம்  வசூலிக்கப்படும். 200 மேல் வரும் யூனிட்டிற்கு ரூ 3.50 அதிகரிக்கும். 200 முதல் 500 யூனிட் வரை ரூ.4.60 கட்டணம் அதிகமாகும். இப்படி யூனிட் அதிகமாக கட்டணம் அதிகமாகும்.

மாதம் ஒரு முறை கட்டணம் 

இதுவே மாதம் ஒரு முறை என்றால் 200 யூனிட் பயன்படுத்துபவர்கள் நூறு யூனிட் இலவசமாகவும் மேலும் நூறு யூனிட்டிற்கு மட்டும் கட்டணம் செலுத்துவார்கள் இதனால் கட்டணம் குறையும். மாதாந்திர மின் கட்டணம் குறையும் என்பதால் இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.