தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு மக்கள் பயன் பெரும் வகையில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச திட்டம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் தினந்தோறும் பெண்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக போக்குவரத்து துறை புதிய திட்டங்களை கொண்டுவரவுள்ளது. அதில் மாற்றுதிறனாளிகள் எளிதில் பயணம் செய்ய கூடிய வகையில் புதிய பேருந்துகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் அண்மை காலமாக கிராமப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களை மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலம்
அடுத்தமாதம் பண்டிகை காலம் நெருங்குவதால் வெளியூரில் சென்று பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பஸ் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படும். இதனை சமாளிக்க பண்டிகை காலங்களில் தமிழகத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகரமாக சென்னையில் இருந்து ஐநூறுக்கு மேற்பட்ட பஸ்களை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பண்டிகை காலம் முன்னிட்டு முன்பதிவு தளங்களில் அளவுக்கு அதிகமாக முன்பதிவு வந்தால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.