ரேஷன் கடைகளில் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாதர்களுக்கு அரிசி சீனி பருப்பு எண்ணெய் போன்ற பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் சில ரேஷன் கடைகளில் பொருள்கள் இருப்பு இல்லை என்று திருப்பு அனுப்பி விடுகின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல் திரும்பி வருகின்றனர்.
சில ரேஷன் கடைகளில் பொருள்கள் இருப்பு இல்லை என்று கூறி கள்ள சந்தையில் பொருள்கள் விற்கப்படுவதை பொதுமக்கள் உணவு வளங்கள் துறைக்கு புகார் தெரிவித்துள்னர். இதனால் தமிழக அரசு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய தனிப்படை குழு அமைத்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.