கூட்டுறவு நிறுவனங்கள் சங்கங்கள் வங்கிகளில் உள்ள நகை கடன் தள்ளுபடி குறித்து இன்று அமைச்சர் பெரியசாமி முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திமுகவின் முக்கியமான தேர்தல் அறிக்கையான நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்தார். இதில் உண்மையான பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யும் பட்சத்தில் ஐம்பத்தி ஒன்று வகையான தகவல்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாவும். நகை கடன் தள்ளுபடி செய்ய 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் பெற்றிருந்தால் அவர்களுடைய தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது என்றும் அறிவித்தார். மேலும் கடந்த ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு தற்போது நகை கடன் தள்ளுபடியாகாது என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சட்ட பேரவையில் அறிவித்தார்.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன்கள் உண்மையான சரியான பயனாளிகளுக்கு விரைவில் தள்ளுபடி செய்யப்படும். சிலபேர் நகை கடன் பெற்றதில் முறைகேடுகள் செய்துள்ளனர் அவர்கள் மீதும் சம்பத்தப்பட்ட சங்க ஊழியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் ஒரு தனி நபரோ அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களோ பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் அவர்களுடைய கடன் தவணை தொகையை கூட்டுறவு நிறுவனங்கள் வசூலிக்க அரசு உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.