Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளின் விவரம் இன்று முக்கிய அறிவிப்பு - NAGAI KADAN THALLUPADI NEWS TODAY 2021

நகை கடன் தள்ளுபடி செய்வதில் மீண்டும் தமிழக அரசு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளது. இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 




தமிழகத்தில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை சட்ட பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பினால் வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு உண்மையான பயனாளிகளை கண்டறியும் பட்சத்தில் நகை கடனை தள்ளுபடி செய்ய பல நிபந்தணைகள் விதித்தது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக தேர்தலில் ஐந்து பவுன் வரை  நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி அளித்ததும் பல பேர் தங்களுடைய நகைகள் எவ்வளவு இருக்கிறதோ அதை 5 பவுன் அளவிற்கு  பிரித்து பல கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர். 

உதாரணமாக ஒருவருக்கு  50 சவரன் வரை நகை இருக்கிறது என்றால் அவர் அதை 10 பிரிவுகளாக பிரித்து பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். இதே போல பல பேர் 100 பவுன் வரை நகை கடன் பெற்றுள்ளனர். எப்படியாவது நகை கடன் தள்ளுபடியாகும் என்று நினைத்து  இவ்வாறு செய்துள்ளனர். இதற்கு கூட்டுறவு சங்க பணியாளர்களும் சில பேர் உடந்தையாக இருந்தனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் தமிழக அரசு 5 சவரன் மட்டுமல்லாது பொது நகை கடன் எவ்வளவு யார் எத்தனை மாவட்டங்களில்  எத்தனை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர் என்று தற்போது முழு ஆய்வில் இறங்கியுள்ளது.  இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்  முறைகேடுகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை நவம்பர் 21ம் தேதி தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளது.   இதனால் உண்மையான பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பணிகள் முடிந்த பிறகு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.