Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடியில் சற்றுமுன் வெளியான திடுக்கிடும் தகவல்கள் - NAGAI KADAN THALLUPADI NEWS TODAY 2021

நகை கடன் தள்ளுபடியில் சற்றுமுன் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியில்  சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் கோவை கிருஷ்ணகிரி சேலம் போன்ற கொங்கு மண்டலங்களில் அளவிற்கு அதிகமாக நகை கடன் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.





தமிழக முதல்வர் சட்டசபையில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் தள்ளுபடி செய்ய அரசு உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல முறைகேடுகள் அரங்கேறியுள்ளது. இரண்டு லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு 2700 கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பல ஆய்வுகளுக்கு உட்பட்டு உண்மையான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இதற்கு ஐம்பத்தி ஒன்று வகை தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


அந்தியோதய அன்னயோஜனா ரேஷன் அட்டைக்கு கடன் 

இந்த வகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை கன்னியாகுமாரி மாவட்டத்தில் கொடுத்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க மேலதிகாரி எழுதிய கடிதத்தில் குமரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் AAY  ரேஷன் அட்டைதாதர் சிலபேருக்கு தள்ளுபடி உச்சவரம்புக்கு அதிகமாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதே நேரம் சொசைட்டி பணியாளர்கள், தெரிந்தவர்கள் என பல பேருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


கொங்கு மண்டலம் 

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கோவை கிருஷ்ணகிரி நாமக்கல் சேலம் என அளவுக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கடன் அளவு எவ்வளவு இவர் தகுதியான நபரை என்பதை பற்றி முறையான ஆய்வு செய்யாமல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு தங்க நகையை மதிப்பீடு செய்யாமலே கவரிங் நகை என்று தெரியாமல் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தேர்தலின் போது அதிக வாக்குகளை பெறுவதற்காக இப்படி செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடன் தள்ளுபடி எப்போது 

தங்க நகை கடன் தள்ளுபடி செய்வதில் கால தாமதம் ஆக்குவதற்கு இதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் கூட்டுறவு துறை அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். தமிழக அரசு பயனாளிகளின் பட்டியலும் விதிமுறைகளும் தயார்நிலையில் வைத்திருப்பதாகும் விரைவில் வெளியிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நகை கடன் தள்ளுபடி அமைச்சர் சொன்ன விளக்கம்