கூட்டுறவு நிறுவனங்களில் வைக்கப்பட்ட 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி எப்போது யாருக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் பெற்ற 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக கூட்டுறவு நிறுவனங்கள் இந்த பணிகளை முடிக்க முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கிடையில் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக தற்போதைய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொரோனா கால கட்டத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தது. மேலும் திமுக அரசு ஆட்சி அமைத்ததும் நிவாரண நிதி பெண்களுக்கு இலவச பேருந்து மகளிர் குழு கடன் தள்ளுபடி போன்ற காரணங்களுக்காக நிதி ஒதுக்கியது. தற்போது நகை கடன் தள்ளுபடி செய்வதில் ரூ.6000 கோடி செலவாகும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நகை கடன் பயனாளிகளின் பட்டியலை சுருக்க பல நிபந்தனைகள் விதித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது அதில் ஏற்கனவே ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் வைத்திருந்து அதற்கான தவணை செலுத்தாமல் இருத்தால் உடனடியாக வசூலிக்குமாறு கூட்டுறவு துறைக்கு உத்திரவிட்டுள்ளது. மேலும் உரிய முறையில் கடன் தொகை மற்றும் தவணையை செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பல பேர் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
இதனால் தான் தற்போது நகை கடன் தள்ளுபடி செய்வதில் கால தாமதம் ஆகிறது. சரியான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நகை கடன் பெற்றுள்ளவர்களின் பட்டியலை வடிகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும் இன்னும் ஒரு சில நாட்களின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.