Header Ads Widget

<

நகைக்கடன் யாருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதில் மீண்டும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு -NAGAI KADAN THALLUPADI LATEST NEWS TODAY 2021

நகைக்கடன் யாருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதில் மீண்டும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு  



நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் மீண்டும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் அடமானம் வைத்துள்ளவர்கள் பயனாளிகளின் பட்டியலை மீண்டும் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அதற்கான பணிகளில் கூட்டுறவு துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள நிதி நெருக்கடியில் நகை கடன் தள்ளுபடி உடனே செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவி தொகை திட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்த பிறகு குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 திட்டம் அமலுக்கு வரும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்வதில் தமிழக அரசு மேலும் சில நிபந்தனைகள் கொண்டு வரலாம் என்றும். பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தால் தமிழக அரசு தற்போதுள்ள நிதி நெருக்கடியில் ஓரளவுக்கு மீண்டு வரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.