தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி பற்றி இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கூட்டுறவு வங்கிகளில் வைத்த ஐந்து சவரன் வரை நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை சட்ட பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் அதே நேரத்தில் நகை கடன் தள்ளுபடி செய்வதில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
இதில் உண்மையான வாடிக்கையார்கள் மற்றும் பயனாளர்களை ஆய்வு செய்து பட்டியலை தயார் செய்ததில் கூட்டுறவு வங்கி பணியாளர்கக்கு மிகவும் பணி சுமை ஏற்பட்டது. இதனால் நகை கடன் தள்ளுபடி முறையான அறிவிப்பு வெளியாவதில் கால தாமதம் ஆனது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் நகை கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகளும் அழுத்தமும் கொடுத்து வந்தனர்.
தமிழக அரசுக்கு ஏற்கனவே கொரோனா கால கட்டத்தில் ஏகப்பட்ட நிதி நெருக்கடியில் தத்தளித்தது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தது மேலும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதனால் தமிழக அரசு நகைகளை அடமானம் வைத்து பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி செய்தால் மேலும் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்று யோசித்தது. இதனால் வாடிக்கையாளர்களின் பட்டியலை குறைக்க முடிவு செய்தது.
இதன்பேரில் கடந்த இரண்டு மாதங்களாக பட்டியலை சேகரித்து தயார் நிலையில் வைத்துள்ளது. தமிழக அரசு நகை கடன் தள்ளுபடி செய்தால் அரசுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி செலவு ஆகும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது நகை கடன் தள்ளுபடி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு நாளை அல்லது மறுநாள் வெளியாகும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டுறவு நிறுவனம் மற்றும் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.