நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு நாளை வெளியாகிறது? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்:
தமிழகம் முழுவதும் அனைவரும் எதிர்பார்த்த நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நகை கடன் வைத்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் பல பேர் உள்ளனர். தமிழக முதல்வர் நகை கடன் தள்ளுபடி செயப்படும் என்று தேர்தலில் தெரிவித்திருந்தார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்த திட்டம் செயல்படுத்துவதில் கால தாமதம் ஆனது.
இதனால் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள், ஏழை எளிய மக்கள் நகை கடனை தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைத்தனர். இதனால் தமிழக பட்ஜெட்டில் நகைக்கடன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பயனாளிகளின் பட்டியலை குறைக்க அரசு திட்டமிடத்து.
அதனை தொடர்ந்து பயனாளிகளின் பட்டியல் தயார் செய்ய முழு வீச்சில் வங்கி பணியாளர்கள் ஈடுபட்டு தற்போது அதற்கான பட்டியலை தயார் நிலையில் வைத்துள்ளார்.
ஆதார் அட்டை
இதில் பல பேர் பல வங்கிகளில் நகை கடன் பெற்றிருப்பது ஆதார் அட்டை அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல வங்கிகளில் நகை கடன் வைத்திருந்தாலும் ஒரு நபருக்கு ஒரு தடைவைதான் நகை கடன் தள்ளுபடி ஆகும் என்று தற்போது அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது பட்டியல் தயார் நிலையில் உள்ளதால் நாளை நகை கடன் அறிவிப்பு வெளியாகும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.