Header Ads Widget

<

கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் தருவதில் புதிய மாற்றம் - LPG GAS CYLINDER PRICE NEWS TODAY 2021

கேஸ் சிலிண்டர்களுக்கு  மானியம் தருவதில் மத்திய அரசு புதிய மாற்றம் கொண்டுவரவுள்ளது. இதனால் சிலருக்கு மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 இந்தியாவை பொறுத்தவரை சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதம் மாதம் ஏறிக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே பெட்ரோல் டிஸல் விலை அதிகரித்துள்ளது. இதையே பொதுமக்கள் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சமையல் காஸ் சிலிண்டர்களின் மானியம் வழங்குவதில் மத்திய அரசு சில நிபந்தனைகள் விதித்து புதிய மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள மக்கள் காஸ் சிலிண்டர்களை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க தயார் நிலையில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரு குடும்பத்தின் வருவாயின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் மானியம் நிர்ணயிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு குடும்பத்தின் வருவாய் பத்து லட்சம் அதற்கு மேல் இருந்தால்  அவர்களுக்கு மானியம் நிறுத்துவது என்றும் வருமானம் குறைவாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியம் தர வேண்டும்  என்று மத்திய அரசு திட்டம் கொண்டுவரயுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த திட்டம் கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு  தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே சமையல்  எரிவாயு மானிய தொகை  குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரும் காலங்களில்  அந்த மானியமும் சிலபேருக்கு கிடைக்காது என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நகை கடன் தள்ளுபடி எப்போது முக்கிய அறிவிப்பு