Header Ads Widget

<

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி - SENIOR EABLE CITIZENS RE-EMPLOYMENT LATEST NEWS 2021

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன் பெரும் வகையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு மற்றும் பல சலுகைகளை பெரும் வகையிலும் மத்திய சமூக நிதித்துறை அமைச்சகம் முக்கியமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





இந்தியாவை பொறுத்தவரை வயது முதிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் முதியோரின் எண்ணிக்கை பத்து கோடியே நாற்பது லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது இதைவிட அதிகமாக உள்ளது. அறுபது வயது கடந்த பலர் பணிக்கு செல்ல விருப்பப்படுகின்றனர். ஆகையால் இதனை  கருத்தில் கொண்டு மத்திய சமூக நிதிதுறை அமைச்சகம் முதியோர்கள் பயன்பெறும் வகையில் ஒரு புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்திகிறார்கள்.

நாடு முழுவதும் அறுபது வயது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு கவுரவமான வேலை வாய்ப்பு வழங்கி தருவது இதன் நோக்கமாகும் இதற்காக புதிய இணையதளமான சீனியர் ஏபுள்  சிட்டிசன் ரி எம்ப்ளயிமென்ட் போர்டல் பெயரில் அறிமுகம் செய்கிறது. இவை நாளை முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. விருப்பமுடைய முதியோர்கள் இந்த வலைத்தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

முதியோர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக மத்திய அரசு சிஐஐ, எப்சிசிஐ, தொண்டு நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களுக்கு  கடிதம் எழுதியுள்ளது. இந்த போர்டல்  நடைமுறைக்கு  வந்ததும் 60 வயது அதற்கு மேற்பட்ட விருப்பமுள்ளவர்கள் அவர்களுடைய பெயர் முகவரி  கல்வி தகுதி முன்னனுபவம் எந்த பணியில் வேலை செய்ய  ஆர்வம் போன்றவற்றை ரெஜிஸ்டர்  கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தும்.  இதில் சில தொண்டு நிறுவங்களும் வேலை கொடுக்க  முன்வந்துள்ளதகாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதியோர்கள் பயன்பெற வேண்டும்  என்று   தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.