6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி திறன் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் பாதித்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள்
இந்த நிலையில் கொரோனவை கட்டுபடுத்தும் விதமாக மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதால் கொரோன பரவல் சற்று படி படியாக குறைய தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திலும் கொரோன தொற்று குறைய தொடங்கியதால் தமிழகம் முழுவதும் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டன.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று
இந்த தளர்வுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டன. மேலும் அதே சமயத்தில் கல்ல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த ஒரு சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகளை தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை
இந்த நிலையில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி இன்று தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்பித்தவுடன் முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படலாம் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.