5 சவரன் நகை கடன் தள்ளுபடி இந்த ரேஷன் அட்டைகளுக்கு தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழக அரசின் முக்கியமான அறிவிப்பான ஐந்து பவுன் வரை நகை கடன் தள்ளுபடி சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அப்போது சில நிபந்தனைகள் விதித்தார். அதில் நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் செய்யப்படும் என்றும் ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர், ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகள் இவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.
யாருக்கெல்லாம் தள்ளுபடி ஆகாது
- ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி ஆகாது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி ஆகாது.
- AAY ரேஷன் கார்டு வைத்து பலபேர் பல கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி ஆகாது.
- அரசு ஊழியர்கள் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தள்ளுபடி ஆகாது.
- கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்படாது.
- அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது.
- கார் வைத்துள்ளவர்கள், வசதி படைத்தவர்களுக்கும் இதில் பயன் பெற முடியாது.
- இவையெல்லாம் ஆதார் அட்டை அடிப்படையில் விவரங்களை சேகரித்து உண்மையான பயனாளிகளை கண்டுபிடித்து. அவர்களுக்கு நகை கடன் செய்யப்படும்.
- இது குறித்த தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடும்.
- நகை கடன் தள்ளுபடி இன்று வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில தினங்களில் தமிழகம் முழுவதும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.