Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடி இன்று வெளியான 5 முக்கிய அறிவிப்புகள் - NAGAI KADAN THALLUPADI NEWS TODAY 2021

நகை கடன் தள்ளுபடி இன்று அமைச்சர் பெரியசாமி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுள்ளார். 




திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக கருத படுவது நகை கடன் தள்ளுபடியாகும். கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் வங்கிகள், கூட்டுறவு நிறுவங்களின் 5 பவுன் வரை நகை அடமானம் வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான வாடிக்கையாளர்களின் பட்டியல் தற்போது தயார் நிலையில் உள்ளது. விரைவில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு  வெளியிட உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி அவர்கள் கூறுகையில்;


1.கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூபாய் 2393 கோடி நிலத்தின் அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

2.அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களில் பல முறைகேடுகள்  நடந்துள்ளது.

3.பல பேர் போலியான ஆவணங்களை காட்டி நகை கடன் பெற்றுள்ளனர்.

4.இதில் சிலபேர் கவரிங் நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளனர்.

5.மேலும் நகைகள் அடமானம் வைக்காமலே நகை கடன் வழங்கி முறைகேடுகள் செய்துள்ளனர். இதில் பல கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

6.நகைக்கடனில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

7.கடந்த அதிமுக ஆட்சியில் போலியான ஆவணங்கள் மற்றும் பயிர்களை காட்டியவர்களுக்கும் முறையான ஆய்வு செய்யாமல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அவர் கூறுகையில் தற்போது தமிழக முதல்வர் பொது மக்கள் பயன் பெரும் வகையில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத பெண்களுக்கு பஸ் இலவச கட்டணம் வாக்குறுதியை  நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.