Header Ads Widget

<

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி இன்று வெளியான முக்கிய அறிவிப்பு - NAGAI KADAN THALLUPADI NEWS TODAY 2021

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி இன்று வெளியான முக்கிய அறிவிப்பு 




தமிழகம் முழுவதும் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பற்றி முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல. இந்த ஆட்சியில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அரசு தேர்தலின் பொது வாக்குறுதி அளித்தது. 

அந்த வகையில் திமுக அரசு ஆட்சியை கைப்பற்றியதுடன் திமுக தலைவர் தமிழக முதல்வராக பதவி ஏற்றதும் முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதே நேரத்தில் அது கொரோனா காலம் என்பதால். தேர்தல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆனது. இதில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாயும் அடங்கும்.

இந்த நிலையில் கடந்த மாதம் நகைக்கடன் வைத்திருப்பவர்களின் பட்டியலை சுருக்க வேண்டும் என்று தமிழக அரசு கூட்டுறவு வங்கி நிர்வாகதிற்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும்.அதன் படி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இரவு பகலாக நகை கடன் வைத்தவர்கள் பட்டியலை தயாரித்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல முறைகேடுகள் நடைபெற்றதை கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடு செய்தவர்களை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்போது நகை கடன் தள்ளுபடி செய்வதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்னும் ஒரு சில கூட்டுறவு வங்கிகளில் இதற்கான பட்டியலை தயார் செய்வதில் வங்கி பணியாளர் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இதனால் நகை கடன் தள்ளுபடி செய்வதில் மேலும் கால தாமதம் ஆகலாம் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் 5 சவரன் நகை வைத்து கடன் பெற்றவர்கள் எப்போது தள்ளுபடி செய்வார்கள் என்று தினம்தோறும் வங்கிகளுக்கு சென்று கேட்டு வருவதாகவும் அவர்களுக்கு விளக்கம் சொல்லியே அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை என்று  வங்கி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.