அனைத்து வங்கியிலும் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி இன்று முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்ட சபை தேர்தலில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 பவுன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தது.
சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி கொரோன நிவாரண நிதி ரூ.4000, 13 வகையான மளிகை பொருள்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை நிறைவேற்றி உள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்ட பேரவையில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்து அதன் பின் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது .
உண்மையான பயனாளிகளுக்கு இந்த நகை கடன் தள்ளுபடி செய்வதில் தமிழக அரசு பல கட்டங்களாக ஆலோசித்து கடந்த இரண்டு மாதங்களாக பயனாளிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று முதல்வர்தெரிவித்துள்ளார்.
நகை கடன் தள்ளுபடியில் முறைகேடுகளை வெளியிட்ட அமைச்சர்
இதற்கிடையில் அனைத்து வங்கிகளிலும் பெற்ற நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். இதில் ஒருவர் கூறும் போது 'பொதுவாக நடுத்தர ஏழை எளிய மக்கள் தங்களின் அவசர தேவைக்கு அதாவது கல்வி, மருத்துவம், திருமணம் போன்றவற்றுக்காக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெறுகின்றனர். ஆனால் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தள்ளுபடி செய்வது அது சிலபேர்கள்தான் பயனடைவார்கள். எங்களை போன்ற நடுத்தர ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.
ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு
இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.