5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி நாளை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு வெளியான தகவல்:
கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து சவரன் வரை அடமானம் வைத்து பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் 51 வகையான பல்வேறு தகவல்களை சேகரிக்கபட்டுள்ளதாகவும், சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அந்த பட்டியலை கடந்த ஒரு மாத காலமாக சேகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் கூறுகையில் கடந்த ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும் விரைவில் சம்பந்தபட்ட கூட்டுறவு நிறுவனங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றிருந்தால் எதாவது ஒரு கூட்டுறவு வங்கியில் மட்டும் தள்ளுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்படும் போன்ற நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆட்சியில் பயிர் கடன் பெற்றவர்களுக்கு இந்த முறை தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் பட்டியலை மேலும் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஐம்பத்தி ஒன்று வகையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட மன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை படி படியாக நிறைவேற்றி வருகிறது. அதில் நகை கடன் தள்ளுபடி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நகை கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடும் பட்சத்தில் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகும், யாருக்கு தள்ளுபடி ஆகாது என்று நாளை தெரிந்துவிடும்.