5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி யாருக்கு 51 தகவல்கள் முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது;
*நகை கடன் தள்ளுபடி தகவல்களை சேகரிப்பதற்காக கடந்த ஒரு மாத காலம் சரியான நபர்களை கண்டுபிடிப்பதற்காக பயனாளிகளின் பெயர், ஆதார் எண், எவ்வளவு கடன் தொகை, நகையின் எடை அளவு, நகை கடன் வைத்தவர்கள் தகவல் எண், முகவரி, வங்கி கணக்கு எண், தொலைபேசி எண், ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் எத்தனை வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளார்கள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
*ஐம்பத்தி ஒன்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
*அவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பல முறைகேடுகள் விதி மீறல்கள் நடந்துள்ளது.முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
*நகை கடன் தள்ளுபடி செய்யும் போது உண்மையான ஏழை எளிய மக்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது.
*5 சவரனுக்கு குறைவாக நகை கடன் பெற்றவர்களின் சில அடிப்படையில் தள்ளுபடி செய்ய அவசியம் ஏற்பட வில்லை என அரசு கருதுகிறது.
*தவறுதலாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தி நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படாது.
*நகை கடன் தள்ளுபடி செய்வதில் தமிழக அரசுக்கு ரூபாய் 6 ஆயிரம் கோடி செலவு ஆகவும்.
*இதற்கான நிதியை கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கும்.
*கோர் பேங்கிங் வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்களை கண்காணிக்கப்பட்டு சிறப்பாக வழிநடத்தி செல்லப்படும்.
*இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு முழு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.