தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் குடும்ப அட்டைதாதர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள கூடாது என்றும் காலம் தாழ்த்தாமல் பொருள்களை உடனே வழங்கும்படியும் பொருட்கள் இல்லை என்று கூறி அலைக்கழிக்க கூடாது என்றும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.
ஆனால் சில ரேஷன் கடைகளில் இதை பொருட்படுத்தாமல் சில ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாதர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு முதியோர்கள் மாற்று திறனாளிகளுக்கு அவர்களுக்கு பதிலாக அவர்களது குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களை வைத்து ரேஷனில் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. ஆனால் ரேஷன் கடைகளில் இந்த முறையை சரியாக பின்பற்ற படுவதில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பொது விநியோக உணவு துறை மீண்டும் ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை மூலம் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உதிரவிட்டுள்ளது. மீண்டும் புகார்கள் வந்தால் சம்பந்த பட்ட ரேஷன் கடைகள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் தாராளமாக பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிக்கு ரூ.1000
இதற்கிடையில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் எப்போது கிடைக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. தற்போது நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். அடுத்ததாக குடும்ப தலைவிக்கு உதவித்தொகை அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.