மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரமும் சரிவடைந்தது. கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் கொரோனா தொற்று படி படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது மக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருந்தது அதாவது கொரோனா நம்மை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி கிருமி நாசினி பயன்டுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் மிகவும் அக்கறையுடன் ஈடுபட்டனர்.
ஆனால் தற்போது மக்களுக்கு கொரோனா என்பது சர்வ சாதாரணமாக பார்க்க தொடங்கி விட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை பழைய நிலைமைக்கு வர தொடங்கிவிட்டனர். ஏனென்றால் தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி அதிகமானோர் போட்டு கொண்டுள்ளனர். இதனால் இனிமேல் தொற்று பரவாது என்று சில பேர் நினைக்கின்றனர். ஆனால் கொரோனா என்பது உரு மாற்றம் கொண்டவை தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டவை ஆனால் பாதிப்பு அதிகளவில் இருக்காது.
சிலபேர் ஒரு தவணை தடுப்பூசி போடாமல் வெளியே சுற்றி திரிகின்றனர். கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. இந்தியாவில் பொறுத்தவரை கொரோனா 2ம் அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் இனி பண்டிகை காலம் என்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முக்கிய வீதிகளில் கூட்டம் கூடுவர். சமூக இடைவெளியை காற்று விடுவார் இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படியும், நிறுனவங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் கொரோனா வழிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அடுத்தகட்ட ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கும் என்று கூறப்படுகிறது. வருகிற அக்டோபரில் கொரோனா 3ம் அலை தாக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.