குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை எந்த வகை ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ரேஷன் அட்டைகளை ஒரு குடும்பத்தில் வருவாய் பொருளாதாரம் தகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தி அதற்கு ஏற்றபடி ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முன்னுரிமை கார்டுகள் முன்னுரிமை அற்ற கார்டுகள் என்று உள்ளன. முன்னுரிமை கார்டுகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு மக்களுக்காக பல நல திட்டங்களை செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதில் குடும்ப தலைவிக்கு மாதம் மாதம் ரேஷன் அட்டை அடிப்படையில் தரப்படும் என்று தேர்தலில் உறுதியளித்தது. ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
ரேஷன் கார்டு மாற்றம்
இந்த நிலையில் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை பெறவேண்டும் என்றால் தலைவரின் புகைப்படம் மாற்ற வேண்டும், அட்டை குறியீடுகளை மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனை நம்பி ஏராளமான மக்கள் ரேஷன் அட்டையை மாற்றம் செய்ய இசேவை மையத்தை நாடி வருகின்றனர். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு கொண்ட கடலை AAY ரேஷன் கார்டு மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு ரேஷனில் வழங்கப்பட்டது. கொண்டை கடலை தரப்பட்ட ரேஷன் அட்டைக்கு மட்டும் உரிமை தொகை வழங்கப்படும் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தனிநபர் ரேஷன் அட்டை
தற்போது தனிநபர் ரேஷன் அட்டைகளுக்கு சரியாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இவர்களுக்கு உரிமை தொகையும் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். ரேஷன் கார்டுகளை மாற்றம் செய்ய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.