பள்ளிகள் திறப்பு 1 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் அனைத்து மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவர்களின் பாட திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டன.
பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் வைக்கப்படாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு அடைய செய்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் நோய் தொற்று படி படியாக குறைய தொடங்கியது. இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். முதலில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கேள்விகள் எழுந்தது. இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வரிடம் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
1 முதல் 8 வரை
இந்நிலையில் முதன்மை மற்றும் நடுநிலை பள்ளிகள் திறப்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அக்டோபர் முதல் 6 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்படும் என்றும் ஒன்று முதல் ஐந்து வரை சூழ்நிலை கருத்தில் கொண்டு அதன் பிறகு திறக்கப்படும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.