Header Ads Widget

<

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இன்று முக்கிய அறிவிப்பு -Tamilnadu government employee DA Hike news

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இன்று  முக்கிய அறிவிப்பு 




தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை படி உயர்த்துவது வழக்கம் . அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வுக்கேற்ப விலை குறியீட்டு எண்ணை கணக்கிட்டு வழங்குவதாகும். நாடு முழுவதும் கொரோன பரவல் காரணமாக நிதி சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. தற்போது கொரோன தொற்று குறைந்துள்ளதால் நாட்டில் இயல்பு நிலை திருப்பும்பியுள்ளது.இதனால் சமீபத்தில் மத்திய அரசு அதன் துறை சார்ந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்தது மற்ற மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டன. 

இதேபோல தமிழக அரசும் அகவிலை படியை தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கும் என்று அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் எதிர்பார்த்தனர். அனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் PTR அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இதன் காரணமாக தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பாக அகவிலை படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிகத்தில் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில் இன்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று தமிழக முதல்வரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்தனர். இதனால் இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்து விரைவில் அகவிலைப்படியை உயர்த்தும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.