Header Ads Widget

<

நகை கடன் தள்ளுபடி எப்போது யாருக்கு செய்யப்படும் வெளியான தகவல்-NAGAI KADAN THALLUPADI NEWS 2021

நகை கடன் தள்ளுபடி எப்போது யாருக்கு செய்யப்படும் வெளியான தகவல்




வங்கிகளில் 5 சவரன்  நகை கடன் தள்ளுபடி எப்போது செய்யப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று தேர்தல் வாக்குறுதிகளை படி படியாக செயல்படுத்திவருகிறது. 

ஆனால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி காரணமாக கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்ய கால தாமதம் ஆனது. இதனால் பொதுமக்கள் அரசுக்கு நகை  கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் தமிழக அரசு கூட்டுறவு வங்கி நிர்வாகிகளிடம் நகை கடன் தள்ளுபடி பட்டியலை விரைவில் தயாரிக்கும்  படி உத்திரவிட்டுள்ளது. அதே நேரத்தில் வசதி படைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.